இளங்குமரனார் களஞ்சியம் நூலாசிரியர் கவிஞர் இரா இரவி நூல் விமர்சனம் கவிபாரதி மு வாசுகி

இளங்குமரனார் களஞ்சியம்
நூலாசிரியர் : கவிஞர் இரா. இரவி
நூல் விமர்சனம் : கவிபாரதி மு. வாசுகி !



வானதி பதிப்பகம். 23.தீனதயாளு தெரு.தியாகராயர் நகர். சென்னை.600017.பக்கங்கள் 74.விலை ரூபாய் 70.தொலைபேசி 044 24342819 / 24310769.



மதுரையின் புகழை மல்லிகை பரப்புகின்றதோ இல்லையோ கவிஞர் இரா. இரவி அவர்கள் இணையத்தின் வாயிலாக பரப்பிக் கொண்டே இருக்கிறார். அதற்கு பிரதிபலனாகத் தான் மதுரை மண்ணும் இவரின் புகழை அதிகப்படுத்துகின்றதோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது எனக்கு.

இளங்குமரனார் களஞ்சியம் என்ற இந்த நூல், கவிஞர் இரா. இரவியின் இருபத்திஆறாவது நூல். இந்நூலுக்கு விமர்சனம் எழுதுவதற்காக வாசிக்கத் தொடங்கியபோது ஒன்றைப் புரிந்து கொண்டேன். மதிப்பிற்குரிய பெரியார் நெறியாளரான பி.வரதராசன் ஐயா அவர்களின் ஐந்து பக்க அணிந்துரையையும். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் செயலாளர் சி.மாரியப்ப முரளி அவர்களின் அணிந்துரையையும் மீறி என்னால் எந்த சொல்லையும் பயன்படுத்திவிட முடியாது என்ற அச்சம் எனக்குள் தோன்றியதே உண்மை. இருப்பினும் கவிஞரின் மனமகிழ்விற்-காக மட்டுமே இந்த நூல் விமர்சனத்தை எழுதுகிறேன்.

கவிஞர் இரா.இரவி அவர்கள் 2019ம் ஆண்டு மட்டும் இறையன்பு கருவூலம். இலக்கிய இணையர் படைப்புலகம். அடுத்ததாக ஏர்வாடியார் கருவூலம் என்ற மூன்று முக்கியமான நூல்களை பொக்கிசமாக அளித்ததுபோல் இந்த 2022ம் ஆண்டு இந்த இளங்குமரனார் களஞ்சியம் என்ற நூலை நமக்கு அளித்திருப்பதில் அவரின் சமுதாய அக்கறையை நாம் பாராட்டியே ஆக வேண்டும்.

ஆய்வு மேற்க்கொள்ளும் மாணவ மாணவியர்களுக்கு இந்த நூல்கள் அனைத்தும் பெரிதும் பயன்படக்கூடியவை. தமிழ் மூதறிஞர் இரா.இளங்குமரனார் பற்றிய செய்திகள் ஒவ்வொன்றும் மிக மிக அருமை. அதிலும் பக்கம் எண் 38லிருந்து 44 வரை புத்தகம் பற்றி கூறும் விளக்கம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. நூல் முழுவதும் நல்ல நல்ல செய்திகள், பலரும் அறியாத உண்மைகள் என படிக்கப் படிக்க ஆர்வம் கூடிக் கொண்டே போகிறது. இந்நூலில் ‘பாராட்டுக்குப் பாராட்டு தேவையற்றது’ என்ற வரிகள் கூட நூறு சதவீத உண்மையென்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் இரா.இரவி + இரா. இளங்குமரனார் என்ற பெயரில் முன்னெழுத்து ஒற்றுமை மட்டுமல்ல மொத்த தமிழ் எழுத்திலும் இருவரிடமும் தமிழ் உணர்வு ஒன்றுபட்டுதான் இருக்கிறது.

இரா.இரவி + இரா. மோகன் போன்ற ஒற்றுமை உணர்வுகள் இதிலும் காணப்படுவது மகிழ்வான ஒன்று தான்.

இந்நூலுக்கென்று மதிப்புரை, விளக்கவுரை, வாழ்த்துரை, நூல் விமர்சனம் என எதுவும் தனியாக தேவைப்படாது. அத்தனையும் ‘அணிந்துரை’ என்ற கண்ணாடியில் பிரதிபலிக்-கின்றது என்பதை உண்மை.



*

எழுதியவர் : கவிஞர் இரா. இரவி (1-Dec-22, 8:39 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 35

சிறந்த கட்டுரைகள்

மேலே