வானைப் பார்த்துக் கூவிடுவாய் - எழுசீர் ஆசிரிய விருத்தம்

எழுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(மா 6 காய்)
(1, 5 சீர்களில் மோனை)

முட்டாள் என்றே காட்டிக் கொள்ள
..முதலில் எழுத்தில் எழுதிடுவாய்;
திட்டம் ஏதும் இன்றி ஏனோ
..தேராப் பதிவைக் கவிதையென்பாய்!
ஒட்டி நட்பாய் எவருஞ் சொன்னால்
..ஓரம் சென்றே கூத்திடுவாய்;
வட்ட நிலாவே வண்ணப் பெண்ணே
..வானைப் பார்த்துக் கூவிடுவாய்!

– வ.க.கன்னியப்பன்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (5-Dec-22, 10:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 34

மேலே