அவள் ஒரு முடிவில்லா பயணம் -2

கதிரும் பாரதியும் பேசுவதில்லை ஆனால் பாரதிக்கு பணம் தேவை என்று கதிரிடம் கேட்டால் பணத்தைக் கொண்டு வந்து டிவி மீது வைத்து விடுவான் நம் நம்மை நம்பி வந்த பெண்ணை நாம் தான் காப்பாற்ற வேண்டும் என்று அவளுக்கு தேவையான எல்லாம் அவன் செய்தான் அவர் பேசுவது மட்டும் இல்லை அவளுக்கு அதுவே பெரும் கவலையாக இருந்தது பேசாமலே நமக்கு தேவையான அனைத்தும் செய்கிறாரே நம்மிடம் பேசினால் இன்னும் எவ்வளவு சந்தோஷமாக இருக்கும் என்று பாரதி நினைத்துக் கொண்டே இருப்பாள் பேச பாரதி போனால் கதிர் எழுந்து போய்விடுவான் இல்லை என்றால் அந்த இடத்தில் அவன் இருக்க மாட்டான் இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டே போனது இதற்கு என்னதான் தீர்வு எப்போது தான் அவர் நம்மிடம் பேசுவார். இவளுக்கு என்ன தேவை என்னென்ன வேண்டும் என்று அவன் யோசித்து ஒன்றொன்றாக வாங்கி வந்து வைத்து விடுவான் தரமாட்டான் வைத்து விட்டால் அவள் எடுத்துப் பார்த்துக் கொள்வாள் இப்படியே நாட்கள் கடந்து விட்டது எப்படியாவது நம் காதலித்த கார்த்திகாவை மறந்து விட வேண்டும் பாரதியை மட்டும்தான் நம் நினைக்க வேண்டும் என்று அவன் யோசித்துக் கொண்டே இருக்கிறான் அதற்கான முயற்சி அவன் செய்கிறான் இதைப்பற்றி அவளிடம் சொன்னால் நம்மை பற்றி பாரதி தவறாக நினைத்து விட்டால் என்ன செய்வது வேண்டாம் இதை அப்படியே விட்டுவிடலாம் என்று அவன் நினைத்துக் கொண்டு இருந்தான் பாரதி சரி பேசும்போது பேசட்டும் எப்பொழுதுதான் பேச வேண்டும் என்று நினைக்கிறாரோ அப்பொழுது பேசினால் போதும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள் பாரதிக்கு கதிர் கொடுக்கும் பணத்தில் மீதி இருக்கும் பணத்திற்கு என்ன செய்வது என்று யோசிக்கும்போது நம் படித்தால் என்ன என்று முடிவு எடுக்கிறாள் சரி அதற்கான புத்தகத்தை போய் வாங்கலாம் என்று அவளுக்கு கொஞ்சம் தயக்கம் பயம் எல்லாம் இருந்தாலும் நாம் வெளியே போய் பார்க்கலாம் என்று வீட்டை விட்டு வெளியே வருகிறாள் வந்து அவளுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி படிக்கிறாள் பேசாத மனிதர்களிடம் பேசும் புத்தகம் மட்டும்தான் என்று அவள் புத்தகத்தையே அதிகம் நேசிக்க ஆரம்பிக்கிறாள் கதிருக்கு என்ன தேவையோ அதை செய்து வைத்து விட்டு மீதி சமயம் எல்லாம் புத்தகம் படிப்பது மட்டும்தான் வழக்கம் என்று மாதிரி மாறிவிட்டாள் கதிரும் வீட்டுக்கு வரும்போது அவளை பார்ப்பான் அவள் படிப்பதை பார்த்துவிட்டு சரி அவள் பாட்டுக்கு அவள் வேலையை பார்க்கிறாள் என்று அவன்னே போய் சாப்பாடு போட்டு சாப்பிட்டு விட்டு போய் படுத்துக் கொள்வான் அவள் படிக்க படிக்க அவள் அறிவு இன்னும் அதிகமாகிறது ஒரு புது நம்பிக்கை பிறக்கிறது இந்த சமயத்தில் தான் கதிர் தன் பழைய காதலியான கார்த்திகாவை சந்திக்கிறான் ஆனால் அவளும் எதுவும் பேசுவதில்லை அவனும் எதுவும் பேசுவதில்லை அவள் வேறொருவனை கல்யாணம் செய்து கொண்டால் நம் பாரதியை கல்யாணம் செய்து கொண்டோம் இதற்கு மேல் நமக்கும் அவளுக்கு என்ன இருக்கிறது நம் அவளை மறக்கத்தான் வேண்டுமே தவிர திரும்பவும் நினைக்க கூடாது என்று கதிர் முடிவு செய்கிறான் இப்படி இருக்க அந்த சமயத்தில் கதிரின் அம்மா அப்பா இருவரும் வீட்டுக்கு வருகின்றனர் பாரதி அவர்களை வரவேற்று சிறப்பாக கவனிக்கிறாள் இப்படிப்பட்ட மருமகள் கிடைப்பதற்கு நான் என்ன வரம் வாங்கி வந்தேன் என்று எனக்கு தெரியவில்லை பாரதி என கதிரின் அம்மாவும் அப்பாவும் சொல்கிறார்கள் அதற்கு பாரதி நீங்கள் அவருக்கு அம்மா அப்பா என்றால் எனக்கும் அம்மா அப்பா தானே அதனால் நான் என் அம்மா அப்பாவுக்கு எப்படி செய்கிறேனே
அப்படித்தான் உங்களுக்கும் என சொல்கிறாள் கதிர் எப்படி அம்மா உன்னிடம் பேசுகிறானா எப்படி இருக்கிறீர்கள் எனக் கேட்டால் அவள் உண்மையை மறைத்துவிட்டு அவர் என்னை நன்றாக பார்த்துக் கொள்கிறார் என்ன வேண்டும் என்றாலும் அவர் வாங்கிக் தருகிறார் நான் மிகவும் சந்தோஷமாகத்தான் இருக்கிறேன் எனக்கு எந்த கவலையும் இல்லை என சொல்கிறாள் சரி என அவர்கள் இருவரும் வீட்டில் இருக்கின்றனர் கதிர் வீட்டுக்கு வருகிறான் வீட்டிற்கு வந்தால் அம்மா அப்பா வந்திருக்கிறார்கள் அவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லையே நாம் பேசமால் இருப்பதனால் தான் நாம் அம்மா அப்பாவை வரச் சொல்லி இருக்கிறாள்ளே இவர்களிடம் நாம் என்ன சொல்வது இவள் என்ன சொன்னாள் என்று தெரியவில்லையே என யோசித்துக் கொண்டிருக்க என்ன கதிர் இப்படி இருக்கிறாய் என சொல்லவும் உடனே அவனுக்கு ஒரு அதிர்ச்சியாகிறது அதற்கு கதிர் அவள் என்ன சொன்னால் நான் எதுவுமே செய்யவில்லையே என சொல்கிறான் நல்லா பேசுகிறாய் என்றுதான் சொன்னாள் எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறது நீ இப்படி இவ்வளவு சந்தோசமாக இருப்பாய் என்று நான் நினைத்தேன் எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை என அவள் சொல்ல ஐயோ பழைய விஷயம் எல்லாம் பாரதிக்கு தெரியாது அம்மா ஏதாவது சொன்னால் பிரச்சனையாகிவிடும் என்று எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ எதற்கு இப்பொழுது வந்தாய் என்று கேட்கிறான் இல்லை நீயும் பாரதியும் எப்படி இருக்கிறீர்கள் என்று பார்க்கத்தான் வந்தோம் என சொல்ல நாங்கள் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் என சொல்கிறான் அதற்கு பாரதி ஏன் இப்படி கேட்கிறீர்கள் அத்தையும் மாமாவும் இருக்கட்டும் நம்ம உடனே கொஞ்ச நாள் என சொல்கிறாள் அதற்கு அவன் நாங்கள் இருவரும் சந்தோஷமாகத்தான் இருக்கிறோம் நீங்கள் இருவரும் ஊருக்கு போய் உங்கள் வேலையை பாருங்கள் என சொல்லிவிட்டு அவர்களுக்கு பணம் கொடுக்கிறான் பணம் கொடுத்து இப்படி அடிக்கடி பஸ்ஸில் வர வேண்டாம் ஏதாவது வேண்டுமென்றால் எனக்கு ஃபோன் செய்யுங்கள் நானே வந்து உங்களை பார்க்கிறேன் இப்படி அடிக்கடி வந்தால் உங்கள் உடம்பு என்ன ஆகும் என கேட்கிறான் சரி நாங்கள் வரவில்லை கிளம்புகிறோம் பாரதி நீங்கள் இருவரும் சந்தோஷமாக இருங்கள் என சொல்லிவிட்டு அவர்கள் இருவரும் கிளம்புகிறார்கள். தன் ஊரில் பண்ணையார் மிகவும் சந்தோஷமாக இருக்கிறர் நம் மகளை ஒரு நல்ல மாப்பிள்ளைக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டோம் அவர்கள் இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள் என நினைத்துக் கொண்டு பண்ணையாரும் அவர் மனைவியும் இருக்கிறார்கள் ஆனால் இங்கு நடப்பது என்ன என்று யாருக்கும் தெரிவதில்லை இரு வீட்டாரிடமும் அவர்கள் உண்மையை சொல்வதும் இல்லை தெரிவிக்க வேண்டாம் என்று இருவரும் நினைக்கிறார்கள் தங்களுக்குள் இருக்கும் பிரச்சினை தங்கள்ளே சரி செய்து கொள்ளலாம் என பாரதியும் கதிரும் நினைக்கிறார்கள் பாரதியின் கேள்விக்கும் விடை கிடைக்கவில்லை கதிர் பதில் சொல்ல வில்லை.

தொடரும் பயணம்...

எழுதியவர் : தாரா (6-Dec-22, 2:21 pm)
சேர்த்தது : Thara
பார்வை : 138

மேலே