எல்லாமே அடிமட்டம்

குழந்தைப்பரும் ஆனந்தமான ஒரு ஆரம்பக் கட்டம்
பள்ளியில் கல்வியுடன் நாம் அனுபவிப்பது ஆட்டம்
கல்லூரியில் படிப்பைவிட ஒருவர் ரசிப்பது பாட்டம்
அங்கே துவக்கம் இளமைத்துடிப்பின் உயிரோட்டம்

பட்டம் பெற்றதும், வேலை கிடைக்கத் திண்டாட்டம்
வேலை கிடைத்ததும் வாழ்க்கைக்கு வெள்ளோட்டம்
வீதிகளில் வேறு பாலினத்தை ரசிக்க கண்ணோட்டம்
காதல்வலை வீழ்ந்தால், காமத்திற்கு முன்னோட்டம்

திருமணமாகி ஒருவருடம், சல்லாபம் கொண்டாட்டம்
குழந்தை வந்ததும் விலகும் மோகத்தின் மேகமூட்டம்
அனுபவம் பெற்றும் புரியாது, வாழ்வு போடும் திட்டம்
அறுபதின் முதிர்ச்சி உரைக்கும் எல்லாமே அடிமட்டம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (7-Dec-22, 12:29 pm)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 47

மேலே