அழகு

எது அழகு?
உன் உள்ளத்தில் தூய்மை இருந்தால்
நீதான் அழகு
உனக்குள் நேர்மை இருந்தால்
நீதான் அழகு
ஆபத்தில் உதவும் தன்மை இருந்தால்
நீதான் அழகு
ஐந்தறிவுகளிடத்தில் அன்பு இருந்தால்
நீதான் அழகு
பெற்றோரிடத்தில் மதிப்பு இருந்தால்
நீதான் அழகு
முதியோரிடத்தில் மரியாதை இருந்தால்
நீதான் அழகு
உனக்குள் எழும் நல்ல எண்ணங்களை
செயல்படுத்தினால்
உனக்குள் நீமட்டுமே அழகு
முக அழகுக்கு முன்னுரிமை கொடுத்தால்
நாள் பல நகர சுருக்கம் பெறும் முகத்தழகு...
எண்ணத்தை ஈடேற்றினால்
எந்நாளும் நீயும்,உன் நினைவும் தான்
இவ்வுலகின் அழியா அழகு!

எழுதியவர் : Uma Natarajan (7-Dec-22, 7:25 pm)
சேர்த்தது : Uma Natarajan
Tanglish : alagu
பார்வை : 67

மேலே