என் பங்குக்கு ஆகாசம்பட்டு பாணி வெண்பாக்கள் 1

நேரிசை வெண்பா

பார்க்கலாம் நின்னபடி; பார்க்கலாம்உட் கார்ந்தபடி
பார்க்கலாம்திண் ணையில் படுத்தபடி - பார்க்கலாம்தான்!
எம்மாம் விழிகள் வியந்த படிபோகும்
அம்மாவின் மாக்கோலத் தை. 1

காக்கிக்கு மேல டிரஸ்ஸில்ல; பேய்மழையில்
சாக்குக்கு மேல கொடியில்ல; - வாழ்க்கையில
சீக்குக்கு மேல சினேகமில்ல; மெல்லவுந்தான்
நாக்குக்கு மேல நஹி. 2

- ஆசிரியர் சேஷாசலம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-Dec-22, 9:46 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 27

மேலே