நீங்காத நினைவில் என்று நீ 555

***நீங்காத நினைவில் என்று நீ 555 ***


அழகே...


அழகே பேரழகே இத்தனை
ஆண்டுகால அரேபிய வாழ்வில்...

எத்தனையோ வெளிப்பயணங்கள்
கடற்கரை ,கோவில்,பூங்கா என...

அத்தனையும் தலைமையில்
ஒவ்வொரு பயணமும்...

என்னைத்தேடி நீ வரவேண்டும்
அரேபிய மண்ணிற்கு...

காதல் பறவையாக
முதல்முறை அறிமுகம் போல...

உன் கரம்
கோர்த்து நடக்கும் பாதை...

சில நிமிடங்கள் என்றாலும்
நினைவில் நீங்காதவை...

உன் கரம் கோர்த்த தருணத்தில்
படபடக்க வேண்டும் இதயம்...

இது புது உணர்வு
என்ற சொலலனும் ஆழ்மனது...

மெளனமாக சில
வார்த்தைகள் பேசுபவன் நான்...

கலகலவென ஆயிரம்
வார்த்தைகள் பேசுபவள் நீ...

நீ பேசும்
நூறு வார்த்தைக்கு...

நான் கொடுக்கும்
ஒரு வார்த்தைதான்...

ஏனோ
வார்த்தைகளை வரவில்லை...

உன்னோடு பேச
நினைக்கும் போதெல்லாம்...

நாவில் நூறு
தேன்துளி ருசித்த சுவை...

எப்படி வார்த்தைகளால்
விவரிப்பேன் உன்னிடம்...

உன் பூ முகம்
பார்க்கும் போது...

அடுக்கடுக்காய் நெற்றியில் வண்ண
பொட்டுகளை பார்க்கும் போது...

எத்தனை பேரின்பம்
அயல் நாட்டில்...

நீங்காத நினைவுகளில் நீயும்
இருப்பாய் என்றும் என்னில்.....


***முதல்பூ.பெ.மணி.....***

எழுதியவர் : கவிஞர் முதல்பூ .பெ .மணி (7-Dec-22, 5:50 pm)
சேர்த்தது : முதல்பூ
பார்வை : 505

மேலே