அதிர்ஷ்டம் கொண்ட அவள் இதயம் 555
***அதிர்ஷ்டம் கொண்ட அவள் இதயம் 555 ***
ப்ரியமானவள்...
என் கருவிழியின் கருமையை
எடுத்து அவள் புருவம் தீட்ட ஆசை...
அதிர்ஷ்டம் என்னவோ அவள்
வீட்டு கருமை இறகுக்குத்தான்...
முத்தத்தில் கன்னம்
சிவக்க வைக்க ஆசை...
அதிர்ஷ்டம் என்னவோ அவள்
எதிர்வீட்டு மழலைக்குத்தான்...
நீராடிய முகம் போல
பூத்திருந்த வியர்வைத்துளிகளை...
ருசிக்க ஆசை
அதிர்ஷ்டம் என்னவோ...
கண்டதும் உறிஞ்சிக்கொண்ட
கதிரவனுக்குத்தான்...
ரேகைக்கொண்ட அவள் இதழ்களில்
ஊதா வண்ணம் தீட்ட ஆசை...
அதிர்ஷ்டம் என்னவோ அவள்
ருசித்த நாவல் பழத்திற்குத்தான்...
மயில்தோகை
கூந்தலை வருடி செல்ல ஆசை...
அதிர்ஷ்டம்
என்னவோ தென்றலுக்குத்தான்...
எட்டுவடிவ குறுக்கை கைகள்
கொண்டு மறைத்துவிட ஆசை...
அதிர்ஷ்டம் என்னவோ
அவள் உடுத்திய சேலைக்குத்தான்...
அவள் கணுக்காலில்
சப்தமிட ஆசைதான்...
அதிர்ஷ்டம் என்னவோ
தங்க கொலுசுக்குத்தான்...
மண் சுமக்கும் அவள் பாதங்களை
என் கைகளில் சுமக்க ஆசைதான்...
அதிர்ஷ்டம் என்னவோ என்னையும்
சேர்த்து சுமக்கும் பூமிக்குத்தான்...
அவள் இதயத்தை
களவாடி செல்ல ஆசை...
அதிர்ஷ்டம் என்னவோ
அவள் இதயத்திற்குத்தான்...
என் இதயத்தையும் சேர்த்து
களவாடி சென்றுவிட்டதே...
காதலை போலவே
அவளும் விசித்திரமானவள் தான்.....
***முதல்பூ.பெ.மணி.....***