பழைய நினைவுகள்
எவரும் அறியாமல் உனை
எதிர்பார்த்த காலம்
உனக்கும் எனக்கும் மட்டும்பொருள்
உணர்த்தும் மொழியில்
உறவாடிய காலம்
வானவில்லின் வண்ணமாக
வலம் வந்த காலம்
வேண்டாமலேயே வேண்டியதை
வரமாக பெற்ற காலம்
பூரிப்பு மட்டுமே
பூரணமாய் இருந்த காலம்
மீண்டும் அந்த காலத்திற்கு
மீளமுடியாது என்று
மறந்து போன காலம் -அல்ல
மறக்கச் செய்த காலம் இது...