இளைத்தல் இகழ்ச்சி
நீதிக்கு உயிர்கொடு
அநீதியின் உயிரை எடு
வீழ்வானா என நினைப்பார்கள்
வீழாதே தாழாதே வாழ்ந்துகாட்டு
தோழனே உன்னை ஒதுக்க நினைப்பர்வர்களிடம்
உன் திறமையை பாதுக்காதே
அலட்சியப்படுத்துகிறார்கள் என கலங்காதே
களத்தை விட்டு விலகாதே
ஒடுக்க நினைப்பவர்களிடம் நடுங்காதே அடங்காதே
இழந்ததை இழந்த இடத்திலிருந்தே எடு
இளைத்துப்போகாதே களைத்துப்போகாதே நிலைத்துநில்
தாழ்வு எண்ணம் கொள்ளாதே
உன் திறமை உனக்கே புரியாது
உன்னுள் இருக்கு உலகாளும் சக்தி
அதை தட்டி எழுப்பு தாண்டவமாடட்டும்
முட்டிமோது எதிரிகளின் சூழ்ச்சியை வெட்டிப்போடு
தோழனே நீ ஆளப்பிறந்தவன்
ஆட்சி நடத்து சாட்சி சொல்லும் வரலாறு
நீ வீரன் என்று இவ்வையகத்திற்கு