குளிர்

குளிர்

குளிரே குளிரே
குரல் கொஞ்சம் கேள் குளிரே...

நாள் முழுதும் சூரியனுக்கு
நிச்சயமாய் அனுமதி இல்லை...

வெள்ளை அடித்திடும் பனிக்கு மட்டும்
நாள் முழுவதும் அனுமதி...

சூடான தேநீர் இக்காலத்தில் தேர்தலில் நின்றால்
நிச்சயமாய் ஜெயித்துவிடும்...

எல்லாம்
இருப்போரை குளிரே நீ வறுக்கவில்லை
வெறுக்கவும் இல்லை...

இல்லாதோர் படும் அவஸ்தைகளை பார்த்தும் கூட
குளிரே நீ ஏன் கொஞ்சம் கூட பொருட்படுத்தவில்லை...

உசுரே போகுது உசுரே போகுது குளிரே...

அடுத்தடுத்த நாட்களில்
நீ கொஞ்சம்
அடக்கி வாசித்தால்
நன்றாக இருக்கும் குளிரே...

அது
நிச்சயமாக நடக்காது எனத்தெரிந்தும்
உன்னை தலைப்பாய் எடுத்து
நடுங்கும் விரல்களில்
கணினியில் எழுத்துக்களை
கவிதையாக மாற்றி
பதிவிடுகிறேன் குளிரே...

என் கவிதைக்காக ஒரு கருணை காட்டு குளிரே...
ஏழைகளின் கம்பளிக்குள்ளும் நுழைவதை தவிரே...!

எழுதியவர் : மன்னை சுரேஷ் (9-Dec-22, 8:02 pm)
சேர்த்தது : மன்னை சுரேஷ்
Tanglish : kulir
பார்வை : 145

மேலே