பாரதிரும் பாரதி

பாரதிரும் பாரதி!

வா பாரதி வா
சாரதியாக கண்ணனை
அழைத்து வா

உன் கவிதையை
மீள் பதிவாகப் போடு
முறுக்கு மீசையோடு
நறுகென்று நாலு போடு

இன்னும் மாறவில்லை
உன் தாய்த் திருநாடு
நெஞ்சு பொறுக்காது உனக்கு
நிலைகெட்ட மனிதரைக் கண்டு

சாதிகள் இல்லையென்றாய்
வீதிகொரு சாதி காண்பாய்
வேலியே பயிர்மேய்வது கண்டு
மனம் பதபதைப்பாய் துவண்டு

கவிதை எழுதி வைத்தாய்
சுதந்தித்திற்கு அன்று
சுதந்திரமாக திரிவது சமூகவிரோதி
என்றால் முகம் சுழிப்பாய் இன்று

சுதந்திரத்திற்கு அடிக்கோலிட்ட
உன் பாட்டு இன்று பட்டிமன்றத்தில்
மேற்கோள் மட்டுமே காண்கிறது

பரவாயில்லை பாரதி
உன்னை நினைப்பவரும்
உன் வழி நடப்பவரும் உலகில்
இன்றும் சிலபேர் உண்டு....

அறந்தை ரவிராஜன்

எழுதியவர் : ரவிராஜன் (11-Dec-22, 8:17 am)
சேர்த்தது : ரவிராஜன்
பார்வை : 49

மேலே