கவின் பூங்கொத்து வாச மாலையும்

கவின் சாரலரே உங்களுக்கா மீண்டுமொரு எண்சீர் விருத்தம்
அனுப்புகிறேன் .எப்படியுள்ளது என்று சொல்லுங்கள்


எண்சீர் விருத்தம்


அரையடிக்கு காய் காய். மா. தேமா

வனத்திலுள்ள மலர்வகைகள் எல்லாம் கொய்து,
.........வாசனைவேர் பச்சிலைகள் பலவும் சேர்த்து,

கனத்ததொரு பூப்பொதியாம் ராமன் காதை
........வான்மீகி யெனும்தவசி கட்டோ டீந்தான்;

இனத்தையெல்லாம் ஆய்ந்தறிந்தி ணைத்துக் கோத்து
......இடைகிடந்த மாசுமரு யாவும் நீக்கி

தனித்தமணம் அறந்திகழும் மாலை யாக்கித்
.......தரணிக்கே சூட்டிவைத்தான் கம்பன் தானே.


விளக்கம் :- ( 1) பூந்தோட்டத்தில் இருந்த எல்லா மலர்களையும் பறித்து அதனுடன் வாசனை வேர்கள் பச்சிலைகள் சேர்த்துஎல்லாம் கலந்த பெரிய பூச்செண்டு போல செய்த வால்மீகி என்னும் தவசி இராம காதை என்று நமக்கு கொடுத்தான்
(2) அதே பூந்தோட்டத்தில் நல்ல வாசனை பொருந்திய மலர்களாக தேர்ந்து எடுத்து இடையே கிடந்த சருகு காம்புகள் நீக்கி அடுக்கி கோர்த்தினைத்து பெரிய அழகான மாலையாக்கி உலகுக்கு சூட்டக் கொடுத்தவன் கம்பன் தான் என்கிறார் தேசிக விநாயகம் பிள்ளை.

......

எழுதியவர் : வால்மீகியும் கம்பனும் (12-Dec-22, 3:52 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 19

மேலே