வீரத் தமிழ்த்தாய்

வீரத் தமிழ்த்தாய்.
⚘⚘⚘⚘⚘⚘⚘⚘⚘

காதலும் வீரமும் கண்களாய்க் கொண்டவள் /
சாதலும் பிறத்தலும் சமமெனும் தமிழ்த்தாய்/

போர்க்களம் புகுந்து புண்பெறா நாளினை /
சீர்பெறா நாளெனச் செந்தமிழ் செப்புவாள் /

கொலைக்களம் தன்னிலும் ஒழுக்கமே காத்தவள் /
விலையிலா மானமும் வீழ்ந்திடின் மாளுவாள்/

கணவனைப் போரிலே காவு கொடுத்தவள் /
மணந்தவன் போனபின் மகனையும் அனுப்புவாள் /

புலிகளை முறத்தினால் புரட்டி எடுப்பவள் /
வலியவள் வீரத்தை அளவிடல் கூடுமோ!!

-யாதுமறியான்.

எழுதியவர் : -யாதுமறியான். (14-Dec-22, 7:12 am)
சேர்த்தது : யாதுமறியான்
பார்வை : 1864

மேலே