💕சுகமான சுமைகள்💕

அழகே...
உன் விழிகளால்
என் இதயத்தை
இதமாய் துளைத்து
பதமாய் பறித்து
சுகமாய் - உன்
நினைவுகளை ஊற்றி
பாரமாய் இதயத்தை மாற்றி...

இரவில் தூக்கத்தை கெடுத்து
பகலில் ஏக்கத்தை வளர்த்து
கனவில் தேவதையாய் நடந்து
உயிரில் உறவாய் நின்றவளே...

நீ கொடுக்கும் தொல்லை
எனக்கு நீதான் பிள்ளை
என் நெஞ்சில் பூத்த முல்லை
எனக்கு வார்த்த கில்லை...

என் அருகில் நீருந்தால்
இமயமலை கடுகாகும்
எரிமலை மெழுகாகும்
சூரியன் குளுச்சியாகும்
சந்திரன் வீழ்ச்சியாகும்...

என் நினைவை
உன் நினைவால்
கொத்தி எடுத்தாலும்
வெட்டி போட்டாலும்
எனக்கு சுகமான சுமைதான்
இல்லை இல்லை
சுத்தமான சுமைதான்...!!!

எழுதியவர் : இதயவன் (14-Dec-22, 12:58 pm)
சேர்த்தது : இதயவன்
பார்வை : 56

மேலே