வாய்தாக்களுடன் போராடி

வாய்தாக்களுடன் போராடி
வரிசையாய் வந்து
போன வாய்தாக்கள்
கூண்டிலேறி கும்பிட்டு
உடல் கூசி ஓய்ந்து
போன கைகள்
கருப்பு கவுனுடன்
புரியாத வார்த்தைகள்
சலித்து போன வாய்
வார்த்தைகள்
இன்று போய் நாளை வா

எதிர் பார்க்காமல்
எதிராளியை அன்று
சந்தித்த போது..!
அரை மணி நேர
அமைதி பேச்சு
சமரசத்தின் சன்னல்
சட்டென திறந்து
நிம்மதி என்னும்
தென்றல்
இவன் முகத்தை
வருடி சென்றது
வழக்கே வாபஸ்
என்னும் முடிவோடு

எழுதியவர் : தாமோதரன்.ஸ்ரீ (17-Dec-22, 3:18 pm)
சேர்த்தது : தாமோதரன்ஸ்ரீ
பார்வை : 31

மேலே