கலையாத நினைவுகள் உன் உணர்வுகள் 555
***கலையாத நினைவுகள் உன் உணர்வுகள் 555 ***
ப்ரியமானவளே...
கடல் அலைகள்
அழகுதான் பார்பதர்க்கு...
அதற்குள் இருக்கும் உயிர்கள்
எத்தனைவகை யாருக்கு தெரியும்...
நானும் கடல் அலை போலத்தான்
இருக்கிறேன் உன்னால்...
எனக்குள் இருக்கும் வலிகளை
யாரால் உணர்ந்துகொள்ள முடியும்...
புரிந்து கொண்டவள் நீயே
உணரவில்லை என்னை...
நீ கொடுத்த வலிகளுக்கு
வார்த்தைகள் இல்லை...
வழிந்தோடும் கண்ணீர் துளிகள்
புரியவைக்கும் உணர்ந்தாள் உனக்கு...
மெய்யாக நேசித்த
காதல் இல்லாமல் போனால்...
உள்ளம் உருகும் என்று
நீ உணராதது ஏனோ...
பாதையில்லாத வானில்
பயணம் தொலைத்த...
நம் காதல்
காலம் எல்லாம் மறந்தாயோ...
உன் ஒற்றை
பார்வையில் மலர்ந்த காதல்...
உன் ஒற்றை வார்த்தையில்
எரிந்துகொண்டு இருக்கிறது...
கலைந்த
என் கனவுகளில்...
கலையாத உணர்வுகள்
உன் நினைவுகள் மட்டுமே.....
***முதல்பூ.பெ.மணி.....***