தலை நிமிர்ந்து நிற்கிறேன்
உங்கள் பேனாவின்
தலை குனிந்தபோதுதான்
தரணியில் தமிழர்களின்
தலை நிமிர்ந்தது.
பாரதியே...பாரதிதாசனே...
கலைஞரே ...கண்ணதாசனே...
உங்களின் தாள் பணிகிறேன்.
உங்களால்தான்
நான்
தமிழன் என்று சொல்கிறேன்.
தலை நிமிர்ந்து நிற்கிறேன்.