போலிகள் சாயம் பூசித் தொங்கும் கவிதை
நேரிசை வெண்பா
பாரதி யீய அகத்திசெய் யத்தமிழை
ஆரம்பித் தார்சிறப்பா யன்றுயாபில் -- சீராய்
தமிழுடை யாப்பைத் தவிர்க்க வருமோ
தமிழும் கவிதையுந் தான்
குறள் வெண்பா
எவரும் கவிதையென்று தீட்டயாப் பின்றி
சுவக்காஆம் குட்டிச் சுவர்
தமிழ் தமிழ் என்று தமிழின் பழம்பெருமை கருதி இலக்கணம்
ஊன்றிக் கற்க முடியாமல் அவர் எழுதும் எதுவும் அருமையான செய்யுள் என்றும் கவிதை என்றும் பாட்டு என்றும் தத்துவம் என்றும் சொல்கிறார்கள். அதெல்லாம் கழுதை நிற்கும் குட்டிச் சுவரே என்று தெரிந்து கொள்ளுங்கள். வரிக்கு ஒரேயொரு சீர் நான்குவரி எழுத
கவிதையாம். இப்படி எந்த தமிழ் நூலில் கற்பித்தார்கள். மடமையே.
தினமும் அவர்கள் நான்கு பாரா அல்லது தொங்கட்டான் போல வரிக்கு ஒருசீர் அல்லது இரண்டு சீர் மூன்று சீர் எழுதி பலரும் அதை கவிதை என்று நம்பவைத்து பல் உரைநடைகளை காதல் என்றால் எவரும் பார்ப்பர் என்று நினைத்து எழுத்துத் தளத்தை குப்பை மேடுகளாக்கி விட்டார்கள். இந்த எழுத்து தளத்தை நடத்துபவர்களுக்கும் சலிப்புதட்டி ஒன்றையும் கவனிக்காது கைகழுவி விட்டு விட்டார்கள்
தமிழை கற்காது அரை வேக்காடுகள் எழுத்தில் வரும்போதே கவிஞர் பட்டத்துடன் நுழைவதையும் அவர்கள் மேதை என்ற நினைப்பில் கிறுக்கும் தத்துவத்தையும் படிக்க என்ன சொல்வது என்றே தெரியவில்லை.. பண்ணாடைபோல நல்லதை விட்டு விட்டு கெட்டதை கெட்டியாய் குரங்குப் பிடியாய் பிடிப்பவர்களிடம் பல முறை எடுத்துச் சொல்லியும் பலனில்லை. தவறு இருக்க சுட்டிக்காட்டி திருத்தம் எவர் செய்யினும் வரவேற்கத் தக்கது.

பாரதி= சரஸ்வதி