கவிதை 1000
எழுத்து.காம் தமிழ் மொழி வலைத்தளத்தில் எனது
"ஆயிரமாவது கவிதை"
கவிதை என்பதே
எண்ணங்களின் மோதல்கள்.
ஆங்காங்கே
கற்பனையில் தோன்றும்
சிந்தனை சிதறல்களின்
வெளிப்பாடு. அவ்வளவுதான்.
சில கவிஞர்கள் கவிதைகளை
இலக்கண மரபுகளின் வரம்புக்குட்பட்டு
இலக்கண ஆடைகளை அணிவித்து
கவி படைத்து
மகிழ்ச்சி கொள்வார்கள்.
நானோ
திருவிளையாடல்
திரைப்படத்தில் வரும்
தருமியைப்போல்
இலக்கண ஆடைகளில்லாமல்
தமிழ் மொழியின்
கண்ணியம் குறையாமல்
கவி படைத்து வருகிறேன்
கவிதையில் வரும்
வார்த்தைகள் யாவும்
என்னைப் போல்
தமிழ் அறிந்தவர்களும்
பாமரனும் எளிதில்
புரிந்துக் கொள்ளும் வண்ணம் எளிமையாகவும்
இனிமையாகவும்
இருந்திட வேண்டுமென்பது
எந்தன் எண்ணம்.
நான் எழுதுவது
புதுக்கவிதையோ
வசன கவிதையோ
நானறியேன்.
நான் இலக்கணமறிந்த
கவிஞன் இல்லை
என்பது மட்டும் உண்மை
ஆனால்.... நான்
ஓர் எழுத்தாளன்
கருத்துக்களைப் படைத்திடும்
ஓர் கலைஞன்.
நான் எந்த வகையைச் சார்ந்தவன்
என்பதை அடையாளப் படுத்தும்
உரிமையை எனது வாசகர்களின்
விருப்பத்திற்கே விட்டுவிடுகிறேன்.
நான் எழுத்து. காம் தளத்தில்
02.07.2020---ல் இணைந்தேன்.
கடந்த 30 மாதங்களில்
"1000" கவிதைகளை படைத்துள்ளேன்.
எனது படைப்புக்களை
எந்த வடிவில்
எழுத்து. காம் வாசகர்கள்
ஏற்றுக் கொண்டுள்ளார்கள்
என்பதை நானறியேன்...
ஆனால்... இதுவரை
10,800 க்கும் மேற்பட்டோர்
பார்வையிட்டுள்ளார்கள்.
100க்கும் மேற்பட்டவர்கள்
கருத்திட்டுள்ளார்கள்.
எனது படைப்புக்களை பார்வையிட்டு, கருத்திட்ட அணைத்து தமிழ் நெஞ்சங்களையும்
வணங்குகிறேன்.
தொடர்ந்து உங்களோடு
பயணம் செய்ய விரும்பும் கலைஞன்
நன்றி... நன்றி...மிக்க நன்றி...!!
--கோவை சுபா