புத்தாண்டு தினம்

என்நாளா யின்யென்ன நீயும் சிவன்கோயில்
சென்று வணக்கம் செலுத்து


நேரிசை வெண்பா

ஆங்கிலேயர் போர்த்துகீசர் மற்றும் பிரெஞ்சுவும்
ஓங்கி அழிந்து ஒழிந்தார் -- தாங்கியவர்
கேவலம் வெட்டியே கேக்கினை ஊட்டுகிறார்
நாவ லெனருசிக்கும் நாவு

நேரிசை வெண்பா

எங்கிருந்தோ வந்தக் கிழவி தெரைசாவும்
இங்கு பரப்ப கிறித்துவம் -- நங்கூரம்
தொங்கவிட்டு தங்கித் தொழுநோய் பெயரதில்
இந்துவைக் கொன்றாள் பிரித்து

நேரிசை வெண்பா
போப்பென்பான் வஞ்சம் புரியா தெவர்க்குமாமே
ஆப்புவைத்த ஐரோப்பின் பாதிரி -- வேப்பங்காய்
கூப்பானே கைச்சிவனை நோக்கி முருகனும்
கைப்பா மிவர்க்குக் கழர்

நேரிசை ஆசிரியப்பாக்கள்

கால்டு வெல்லும் பெஸ்கி போப்பும்
தமிழை வளர்த்தார் என்பயோ துரோகி
கொன்றார் நந்தமிழ் தெலுங்குடைக் கடவுள்
எல்லாம் இங்கே போப்பின் காலத்தில்
வாழ்ந்த உவேசா ஐயர் நூறுடை
இருபது சுவடி ஆங்கே திரட்டி
ஒப்பு செய்ததை வெளியிட் டார்சொல்
கிருத்துவன் தமிழின் இந்துவை தெலுங்கு
இந்துவை அவரவர் மொழியை கற்று
கிருத்துவம் பரப்பினான் விவிலியம் தமிழில்
தெலுங்கில் யேனாம் இந்திய மொழிகள்
அத்துணை யிலுமே செய்தவர் கிருத்துவம்
பரப்பி மாற்றினர் அவர்மதம் திருடர்
தமிழை வளர்த்தான் ரெட்டி நாயுடும்
சொல்ல வேண்டுமா முட்டாள்
தமிழர் எனும்மூ டஜென்மங் களுக்கே

ஐந்து காப்ப்பியம் வளையா பதிகுண்ட
லக்கேசி யதைகொடுத் ததும்நம் ஐயர்
பத்தும் எட்டுடை தொகையும் ஐயர்
சீவகன் சரித்திரம் இலக்கியம் திரட்டி
ஈந்த வர்க்கிங் கில்லை யோர்சிலை
சிலுவையின் புராணம் மேரியின் புராணம்
இயேசுவின் புராணம் செய்தது தமிழுக்கு
செய்த தொண்டாம் தேவநே யனும்மேரி
புகழ்பாட திருப்புகழ் பாடானின புகழைநாம்
ஏனாம் பாடுதல் வேண்டும்
அவரெல்லாம் தமிழரைக் ஒடுக்கவந்த பிசாசே

ஜஷஹ எழுத்து ஸவும் வடமொழி
கலப்பு என்று கூப்பா டிட்டு
ஜன்னி கண்டு மூக்கை சிந்தியே
அழுவர் கிருத்துவ மதமா றியநம்
இந்துவின் நினைப்பை நினைக்கா செய்தார்
நோக்கம் ஆளும் திராவிடர்
தமிழை ஆழவே புதைப்பன் பாரே

நேரிசை ஆசிரியப்பா

என்று தணியு மிந்த ஆங்கில
மோகம் என்று பாடிடும் தமிழனின்
புதுவரு டதினமும் மறந்ததும் எதற்கோ
சீக்கிரம் உணர்ந்து வாழ்த்து
சொல்லினி தமிழர் புத்தாண் டுக்கே




...........

எழுதியவர் : பழனி ராஜன் (30-Dec-22, 8:26 pm)
பார்வை : 69

மேலே