💕மழலை💕
கள்ளம், கபடம்
இல்லாத சிரிக்கும்
மழலையின் சந்தோசத்தை
பார்க்கும் தருணம்...
இந்த உலகில்
எங்கு சென்றாலும்
கிடைப்பதில்லை...
தத்தி தத்தி
நடக்கும் மழலை
பாதங்களை கண்டு
பூவின் இதழ்களும்
தோற்று போகும்...
புரியாத பாசையில்
தெரியாத ஓசையில்
வார்த்தைகள்...
ஒலிக்கும் சத்தத்தை
குயில்கள் கேட்கும்
போது கூவுவதை
நிறுத்தி விடும்...
மழலை பாதங்கள்
மார்பில் உதைக்கும்
போது "ப்பா"
என்ன ஒரு ஆனந்தம்
இப்படி சொல்லும்
போதே பேரானந்தம்...!!!