250 கடையனாம் வேசையினும் கைக்கூலி பெறுவோன் – கைக்கூலி 6

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில் ஒற்றோ தான் வரும். நெடில், நெடில் ஒற்று வராது)

காசதி கந்தனைக் கருதி வாதந்தீர்ந்(து)
ஏசுற ஏழைகட் கிடர்செய் வோன்தனம்
மீசரங் குறைவுபா ராது மேவிடுந்
தாசிய ரினுமிழி தகவு ளானன்றோ. 6

- கைக்கூலி, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

கைக்கூலி அதிகமாக தருபவர்க்கு உடந்தையாக வழக்கைத் தீர்த்து, அதன் விளைவாக ஏழைகள் தூற்றும்படி அவர்களுக்குத் துன்பம் செய்பவன்,

உயர்வு தாழ்வு கருதாது பணம் ஒன்றே கருதிக் கூடும் வேசியை விட ஒழுக்கக்கேடு உடையவனாவான் அல்லவா!” என கைக்கூலி பெறுபவன் வேசியினும் கீழானவன் என்று இடித்துரைக்கிறார்.

வாதம் - வழக்கு. மீசரம் - உயர்வு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (2-Jan-23, 6:45 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 26

சிறந்த கட்டுரைகள்

மேலே