சமூகம்

சமூகம்
ஆங்கிலேயர்களிடம் நேரடியாக
அடிமையாகயிருந்தோம் - அன்று
அரசியல்வாதிகளிடம் மறைமுகமாக
அடிமையாகயிருக்கிறோம் - இன்று
அம்மாயென்ற அன்பினை விட்டு
மம்மி என்றழைக்கும் மாயையில் மயங்கி விட்டோம்
அறிவினை கொடுக்கும் கல்வியினை
பணம் சம்பாதிக்கும் ஆக்கப்பூர்வமான தொழிலாக்கிவிட்டோம்
நற்குணமுள்ளவனை நடுத்தெருவில் தள்ளிவிட்டு
பணமுள்ளவனை பட்டத்து அரசனாக்குகிறோம்
பணம் பணம் பணம் எங்கும் பணம் எதிலும் பணம்
பணமுள்ளவனை பண்பாளன் என்கிறோம்
குணமுள்ளவனை குப்பையில் எறிகிறோம்
பணம் தந்தால் போதும் நம்மையே நாம் ஓட்டினால் விற்கிறோம்
எவனோ ஒருவன் எஜமானாக வாழ
ஏழை நாம் இரவும் பகலும் உழைக்கிறோம்
உழைப்பவனுக்கோ ஒருபடி காசு இல்லை - ஆனால்
நம் உழைப்பைதிருடுபவனோ பணம் பதவி அதிகாரத்துடன் உல்லாசமாக வாழ்கிறான்
உழைப்பைதிருடுபவனையும் ஊழல் செய்பவனையும் தலைவராக்குகிறோம்
வறுமையில் திருடும் எளியவனையும் குற்றவாளியாக்குகிறோம்
நம் நாடு நம் மக்கள் என்று பொதுநலமில்லாமல்
என் வீடு என் குடும்பம் என்ற சுயநலவாதியாகிவிட்டோம்
கேள்வி கேட்டால் கெட்டவன் என்கிறோம்
நாட்டு மக்களுக்கு நன்மை செய்யும் நல்லெண்ணத்துடன்
எவன் வந்தாலும் மோசக்காரன் வேசக்காரன்
என்று கூறி அவன் வாழ்க்கையை அழித்துவிடுகிறோம்
நன்றி என்பதையே மறந்து நயவஞ்சகர்களாகிவிட்டோம்
அடுத்து வரும் தலைமுறைக்கும் பொல்லாத உலகமென கூறி
பொய்யுணர்வுகளுடன் வாழ கற்றுத் தருகிறோம்
நல்லதொரு நாட்டை பொல்லாத நாடாக மாற்றியது
நாம் தானே நம் எண்ணங்கள் தானே - இனிமேலாவது
பணத்திற்கு மகுடமளித்து மரியாதையளிக்காமல்
நற்குணத்திற்கு மரியாதையளிப்போம்
அனைவரும் நல்லவர்கள் அனைவரும் கெட்டவர்கள்
தம்மை போல் பிறரிடம் அன்பு செலுத்துவோம்
நாமும் வாழ்ந்து அனைவரையும் வாழ வைத்து
நல்லதொரு நாடாக நம் நாட்டை மாற்றி
நாளைய தலைமுறையை நன்றியுடன் வாழ வைப்போம்!!!!

எழுதியவர் : M. Chermalatha (13-Jan-23, 4:42 pm)
சேர்த்தது : M Chermalatha
Tanglish : samoogam
பார்வை : 514

மேலே