ஜல்லிக்கட்டு
முருகவேலின் கூர்மையோ கொம்புகளி ரெண்டும்
முக்கண்ணனின் தீர்க்கமோ கண்களி ரெண்டும்
கொட்டும் முரசோ குளம்புகளின் ஓசைகள்
குஞ்சல வாலென்ன சூறாவளிச் சாட்டையோ
வாளியாய் பாய்ந்தாய் வாடிவாசல் விட்டு
வட்டமிட்டு மண்ணைக் கிளறி முறைத்தாய்
வீறுகொண்டு பாய்ந்து சிதறினாய் வீரர்களை
விண்ணோக்கிப் பந்தாடினாய் வீரர் சிலரை
தினவெடுத்த தோள்களும் ஏறு நடையும்
துடிப்பான உள்ளமும் வற்றாத வீரமும்
உன்னைத் தழுவி திமிலைப் பிடித்து
உன்னையும் மண்டியிட வைக்கும் மறவருண்டு
வெற்றிமாலை சூடுவது காளையோ வீரனோ
வெற்றி தமிழுக்கு நிச்சயம்