ஏமாற்றம்
நான் இன்று வரை நினைத்ததில்லை
என் வாழ்க்கை இப்படி மாறும் என்று...
தாய் தந்தை இருந்தும் அனாதை ஆவேன் என்று...
தங்கையின் நிச்சயதார்த்தம் நான் இல்லாமல் நடக்கும் என்று..
வெறும் 10 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் பெற்றோரை 10 மாதங்களாக
பார்க்க முடியாது என்று ...
கணவனுக்கு பிடிக்கவில்லை எனில் தாய் தந்தை கூட தவிர்க்க வேண்டும் என்று..
மாமியாரின் வசை சொற்களை அமைதியாய் கேட்க வேண்டும் என்று ...
சுய மரியாதையை சில சமயம் மறக்க வேண்டும் என்று..
அனைத்தும் மாறி விட்டது..
இன்னும் மாறாமல் இருப்பது...
என் பெற்றோர் மீது நான் வைத்த அன்பும் அவர்கள் என் மீது வைத்த அன்புமே