அப்பா..//
ஒரு சொல்
மந்திரம் அப்பா..//
இயலாமையை புரிந்து
உபதேசம் செய்யும் குரு..//
உங்களை வர்ணிக்க வார்த்தைகள் தேவையில்லை..//
நினைவிலே போதுமானது
வந்துவிடும் கண்ணீர்..//
எத்தனை பிறவிகள்
எடுத்தாலும்..//
மீண்டும் மீண்டும்
ஆசை கொள்வது..//
எப்பிறவியும் தந்தையாக
நீங்களே வேண்டும்..//
இறைவா இதுவே என் பேராசை..//