பெண்ணின் அழகு அன்று இன்று ரசிகர் சொல்லுவது

மஞ்சள் பூசிய அழகிய பெண்ணின்
கொஞ்சும் முகத்திற்கு அன்று அன்றென்றால்
ஐம்பது வருடம் முன்னர்க் கூட மவுசு
'மஞ்சள் முகமே வருக' என்று அன்று
வானொலியில் ஒலித்த தமிழ்திரைப்
பாடலும் இன்றளவும் உள்ளத்தில் நிற்கிறது
இன்றைய வாலிபரோ 'மஞ்சள் பூசிய
முகம், பின்னிய கூந்தல்' என்றெல்லாம்
பெண்ணின் அழகின் இலக்கணங்கள் என்றால்
நம்மை கொஞ்சம் எற இரங்கப் பார்ப்பார்
இயற்கையோடு இயையும் அழகு தெரியாதவர்
இன்றைய இளைய சமுதாய மக்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (24-Jan-23, 4:03 pm)
பார்வை : 2596

மேலே