326 செல்லும் பேர்ச் செல்வத்தால் செருக்குறல் நெறியன்று - செல்வச் செருக்கு 5

கலி விருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)

தரித்திரந் தரித்திர மென்னுந் தாரணி
சிரித்திடச் செல்வமே செல்வ மென்னுமிச்
சரித்திர முணர்ந்துமே தரையிற் பொன்னெமக்
குரித்தெனச் செருக்குத லுரனன் றுள்ளமே. 5

- செல்வச் செருக்கு, நீதிநூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”நெஞ்சமே! வறுமையாகிய தரித்திரம் என்ற உலகம் சிரித்திட, நிலையில்லாத பொருளாகிய செல்வமும் சென்று விடுவோம் என்று சொல்லும் இவ்வுண்மை உணர்ந்தும் இந்த உலகில் செல்வம் நமக்குரியது என்று தற்பெருமை கொள்ளுதல் அறிவுடைமை ஆகாது” என்கிறார் இப்பாடலாசிரியர்.

தரித்திரம் - வறுமை. செல்வம் - பணம்; பொருள். செல்வம் - நீங்குவம்.
உரன் - உடைமை.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (25-Jan-23, 4:54 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 13

மேலே