பொல்லாத காதல்

காதலன்: மாலதி உன்னை மாலா என்று கூப்பிட்டால் பிடிக்குமா மாலு என்று கூப்பிட்டால் பிடிக்குமா?
மாலதி: இரண்டுமே வேண்டாம். மால் என்று கூப்பிடுங்கள்.
காதலன்:???
&&&
காதலி: இன்று என் பிறந்த நாளுக்கு என்ன பரிசு?
காதலன்: நானே உனக்கு ஒரு பரிசுதானே?
காதலி: ஆனால் எனக்கு வேண்டும் பரிசு உங்கள் பர்ஸ் தானே!
காதலன்:???
&&&
காதலன்: நாளைக்கு பீச்சு போறது கேன்சல் ஆகிவிட்டது.
காதலி: ஏன்?
காதலன்: அங்கு சுண்டல் விற்பனை செய்யும் பசங்க ஸ்ட்ரைக் பண்ணுறாங்களாம்.
காதலி: எனக்கு ஐஸ்கிரீம் இருந்தாப் போதும். வேற எதுவும் வேணாம்.
காதலன்: சுண்டல் சாப்பிடறவங்க தான் ஐஸ்கிரீம் சாப்பிடுவாங்களாம். அதனால் அவங்களும் நாளைக்கு ஸ்ட்ரைக்
காதலி: ???
&&&

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (26-Jan-23, 2:12 pm)
சேர்த்தது : Ramasubramanian
Tanglish : pollatha kaadhal
பார்வை : 62

சிறந்த நகைச்சுவைகள்

மேலே