அவள் பார்வை

தேவ கன்னியர் அழகையும் மிஞ்சும்
பாவை அவள் அழகு அவள்
பார்வை என்மீது விழுந்தது என்பாக்கியமே
ஏனென்றால் அதில் நான் கண்டது
அன்பும் பண்பும் அது ஒருநொடியில்
என்னுளத்தில் பதிந்திருந்த மோகமுள்ளை
வேருடன் எரிந்து அங்கு அன்புத்தோய்
காதலை விதைத்தது அதை உணர்ந்தேன்
அக்கணமே என்னை மறந்தேன் அவளுள்
அவள் உள்ளத்தில் கலந்து

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Jan-23, 2:20 pm)
Tanglish : aval parvai
பார்வை : 261

மேலே