வேப்பமரத்தின் கதை
எங்கள் வீட்டு வேப்பமரம்
உங்கள் வீட்டைக் குப்பையாக்குவதால்
சண்டைக்கு வந்தீர்கள்
மறுநாள் நாங்கள் மரத்தை வெட்டி விட்டோம்
மறுபடியும் நீங்கள் சண்டைக்கு வருவீர்கள் என்ற பயத்தினால் அல்ல
எங்களுடன் சண்டை என்பது தெரிந்தும்
உங்களுக்கும் சேர்த்து ஆக்சிஜன் தந்ததனால்..