609 கிளைஇலைபோல் உடன்பிறந்தார் கெழுமுதல் பண்பே - உடன் பிறந்தார் இயல்பு 2

கலிவிருத்தம்
(கூவிளங்காய் கூவிளம் கூவிளங்காய் விளம்)

கொம்பருள்ளு லர்ந்திடக் கூடவாடு மிலைகளும்
பம்பியக்கொம் போங்கிடப் பன்னமுஞ் செழிக்குமால்
தம்பியண்ண னென்னவே சார்ந்துளோர்த மின்பமும்
வெம்புதுன்பு மொன்றென மேவிவாழ்தன் மேன்மையால். 2

- உடன் பிறந்தார் இயல்பு
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

மரக்கிளை ஈரம் புலர்ந்து உள்உணங்க அதன்மேலுள்ள இலை முதலியவும் வாடும். அது செழித்திருக்க அவைகளும் செழித்திருக்கும்.

அதுபோல் தம்பி, அண்ணன் என்னும் இருவரும் ஒருவரையொருவர் சார்ந்து ஒற்றுமையாய் இன்ப துன்பங்களை ஒக்க அடைந்து பொருந்தி வாழ்தல் மிகவும் மேன்மையாகும்.

கொம்பு - மரக்கிளை. உலர்தல் - உணங்கல். பம்பல் - வாடல். பன்னம் - இலை. வெம்பு - வருந்து.
மேவி - பொருந்தி.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (30-Jan-23, 4:11 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே