276 புதைக்கும் புல்லரை பொருள் குடி கெடுக்கும் – கடும்பற்று 5

கலிவிருத்தம்
விளம் விளம் மா கூவிளம்
(மாச் சீரின் இறுதியில் குறிலோ, குறில்+ஒற்றோ தான் வரும். நெடில், நெடில்+ஒற்று வராது)
(விளம் வருமிடங்களில் மாங்காய்ச்சீர் வரலாம்)

செல்லவோர் போக்கின்றிச் செறிந்த நீர்கனல்
இல்லமே யழித்தெழுந் தேகல் போற்செல(வு)
இல்லையென் றடைத்தபொன் னெழுத்து தன்னைக்கொள்
புல்லரைக் குடிகெடுத் தகன்று போகுமே. 5

– கடும்பற்று, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

”செல்வதற்கு வழியின்றி மிகுந்த நீரும் நெருப்பும் தாமுள்ள வீட்டை அழித்துச் செல்வது போல், செலவு இல்லையென்று ஒருவன் புதைத்து வைக்கும் செல்வம், தன்னை வைத்திருக்கும் அறிவில்லாதவனைக் குடிகெடுத்து அவனை விட்டுச் செல்லும்” என்று எச்சரிக்கிறார்.

போக்கு – வழி, செறிந்த – மிகுந்த, புல்லர் - அறிவில்லாதவர்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (31-Jan-23, 3:26 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 11

மேலே