ஆராரோ ஆரிரரோ கண்மணியே
🦁🦁"ஆராரோ ! ஆரிரரோ !
கண்மணியே கண்ணுறங்கு
கண்ணுக்கினியாள் நீ கண்ணுறங்கு
பேரழகாள் நீ கண்ணுறங்கு
பேசும் கிளியாள் நீ கண்ணுறங்கு
உன் மழலைப் பாட்டை நான் பாட வந்தேன்
நான் சொல்வேனோ நீ கேட்பாயோ !
ஓடும் நதியில் நீந்தி நீந்தி மீனைப் பிடித்து பிடித்து
மானுக்குத் தூண்டில் போட வேண்டும் என்று சொன்னாய் !
வானவில்லை வளைத்தெடுத்து தலையில் கிரீடம் சூட்டி
ஊர்வலம் போவேன் என்று சொன்னாய் !
மேகங்களில் பொன்னூஞ்சல் ஆடி விண்வெளியில் பறவையாய்
சிறகொடிய பறக்க வேண்டும் என்று சொன்னாய் !
உலக பந்தைத் தலையில் கரகம் ஆடி உலகத்தோடே
நானும் சுற்றி வருவேன் என்று சொன்னாய் !