தாயின் தாலாட்டு

🐿🐿"சின்னப் பூவே சின்னப் பூவே
               மெல்ல நீ பேசு பூவே மெல்ல நீ பேசு !
            உன் குரல் கீதம் சங்கீதம் என்று
               மெல்ல நீ பாடு பூவே மெல்ல நீ பாடு !
            உன் கைகாலின் ஆட்டம்
மயில்களின் கூட்டம் என்று
               மெல்ல நீ ஆடு பூவே மெல்ல நீ ஆடு ! 
            கடலின் சிரிப்பு உந்தன் பேச்சு
                மெல்ல நீ பேசு பூவே மெல்ல நீ பேசு !
            கனவின் நேரம் புன்னகையில் தெரியும்
                மெல்ல நீ காணு பூவே மெல்ல கனவு
நீ காணு !
             நீ சிரிக்கும் சிரிப்பு அழகின் மத்தாப்பு
                 மெல்ல நீ சிரி பூவே மெல்ல நீ சிரி !
             உன் சின்ன நடையே பின்னல் நடையே
                  மெல்ல நீ நட பூவே மெல்ல நீ நட !
 🐿🐿

எழுதியவர் : சு.சிவசங்கரி (31-Jan-23, 10:15 pm)
சேர்த்தது : சு சிவசங்கரி
Tanglish : thaayin thaalaattu
பார்வை : 155

மேலே