வல்லமை இல்லாமை

வல்லமை இல்லாமை!

ஊரோடு ஒத்தபாடு
என்றிருப்பது ஆற்றாமை!
பகுத்தறிவை பகிராமல்
வீணடிப்பது அறியாமை!

பிறர் வாய் பார்ப்பது
பாமரனின் அறியாமை!
முடியாதென்றுரைப்பது
கோழைகளின் இயலாமை!

துணியாமல் இருப்பது
சோம்பேரியின் முயலாமை!
முயன்றவர் தோற்பது
அதி்ல் வெற்றி தெரியாமை!

குழந்தைகள் வீழ்வது
கால்களின் முடியாமை!
பாரினில் தனிப்பது
வாழ்வினைக் கல்லாமை!

துரோகங்கள் மிகைப்பது
மனிதம் வளராமை!
அநீதி வெல்வதென்பது
பாரெங்கும் மெய்யது மரித்தமை!

ஆற்றாமை அறியாமை
என்பது புரியாமை!
முயலாமை இயலாமை
என்பதெல்லாம் வல்லமை இல்லாமை!

ஜவ்ஹர்

எழுதியவர் : ஜவ்ஹர் (3-Feb-23, 12:00 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 94

சிறந்த கவிதைகள்

மேலே