கரை சேரா காதல்

கரை சேரா காதல் ...

அன்புள்ள என்னவளுக்கு ...

என் அன்புக்கு உரிய இனிதானவளே ....
உன்னை கண்ட நாள் முதல் ...
என் சிந்தையும் செயலற்று கிடக்குதடி ...
உன் கரம் கோர்க்கும் அந்நாட்களை
மட்டுமே எண்ணி எண்ணி ...

உன் மனதை கொள்ளை கொள்ள ...
என்னிடம் ...
அர்த்தமுள்ள சொற்கள் பல இருந்தும் ...
பொருளறியா வெற்று வார்த்தைகளை மட்டுமே ...
தேடிப்பிடித்து கோர்வைகளாக்கி
அனுப்பி வச்சன் உன்னருகே ...

நான் அர்த்தம் அற்றவன் என்பதால் அல்ல ...

நீ அனுப்பும் ஒற்றை வரிகள் கூட ...
ஓராயிரம் பொருளுணர்த்தி அர்த்தமுள்ள வரிகளாய் ...
உயிர்பெற்று ...
என்னுள் ...
ஹார்மோன்களை இடம்மாற்றி ...
என் காதல் அகராதியில் ...
அர்த்தமுற்று செல்லும் என்ற எண்ணத்தினால் ....


உன் உரை நிகழா நாளிகைகள் கூட ...
மரணித்து போகுதடி என்னுள்ளே ...

உன் மூவெழுத்துக்கவிதையை
சுவாசம்
கொள்ள இயலாமல் ...

பேனா
முட்களும் கர்வம் கொள்ளும் ...
நான் எழுதும் எழுத்துக்களால் அல்ல ...
என்னவளின் காதல் வரலாற்றை
பதிப்பிக்கும் வேளையிலே ...

காகிதமும் முந்தானை விரிக்கும் ...
உன்னை எழுத்துக்களால் ...
முத்தமிட்டு செல்கையிலே ....

ஒய்யார நடை போட்டு ...
வட்ட விழி பார்வை கொண்டு ...
ஏரிக்கரை மேல நீ ....
நடந்துதான் போகையிலே ...

எம்மனசு வேகுதடி ...
என்னவளை தேடுதடி ...
உன்னருகே நான் வாழ நினைக்கயிலே ...

என் உள்ளங்கையளவு இதயமும்
துடி துடித்து போகுதடி ...
உன் மன போதையிலே .....

திக்கற்று நிக்குறனே
என் வாழ்க்கை
பாதையிலே ...

எத்தனை நாள் தவம் புரிஞ்சன் ...

எந்த பொண்ணும்

ஏரெடுத்தும் பார்க்கலையே ...

என் தவமும் களஞ்சிருச்சே
உன்ன பார்த்த வேளையிலே ...

என பார்த்து
நானே வெட்கப்பட்டு
தலைகுனிந்து
புன்சிரிப்பு பூத்தேனடி ...
உன் கூட பேசையிலே ...

பலநாளு உறஞ்சிருந்த
linkedin வலைத்தளத்தை
பைத்தியமா பார்க்க வச்ச...

உன் linkedin பக்கத்தை காவல் காக்க
புது காவல் காரன் என்ன வச்ச ..

கற்கள் சிலைப்படுவதும் ,
சிதைபடுவதும்
சிற்பியின் கரங்களில் ...

என் வாழ்வு
செம்மையாவதும்
செழுமை இழந்து போவதும்
என்னவளின் கரங்களிலே ...

சுமைகள் பல சுமந்திருந்தும் ...
சுகமாய் தோணுதடி ...
உன் ஓர விழி பார்வை ...
என் மீது படர்கையிலே ...

தினம் தினம் இமைகளும்
விழி மூட மறுக்குதடி ...
என்னவளே உன் வருகையை எதிர்நோக்கி ....

"" தாலாட்டு கேட்டதில்லை தாய்ப்பாசம் பார்த்ததில்லை
எனக்கொரு சொந்தம் சொல்ல வருவாளோ
என் வாழ்க்கைக்கொரு அர்த்தம் சொல்லி தருவாளோ ""

என்ற பாடல் வரிகள் கூட என் உயிரை உருக்குலைத்து செல்லுமடி சிலநேரம் ....

தாயிருந்தும் பயனும் இல்ல
தாய்ப்பாசம் பார்த்ததில்லை
என் தாயும் நீதானே
உன் கரம் கோர்க்கையிலே ...

உன் அழகுக்கு முன்னாடி
என் தகுதி பத்தலையோ ...
இருந்தும் தேடுதடி ...
எம்மனச உன்னிடத்தில் ...

காதலுக்கு கவி எழுத வைரமுத்து வீற்றிருக்க ...
என் காதலுக்கு காவியம் எழுத என்ன விட்டா யாரிருக்கா ...

செவி கேட்கும் இசை கூட என்னவளுக்கே
எழுதப்பட்டது போல ...
என் காதலை
உதிர்த்து விட்டு
செல்லுமடி
அவ்வப்போது ...

செந்தமிழும் நா பழக்கம் ஆனதடி
என்
வெறுமையான வாழ்க்கையில் ...

உன்னை ஒரு கனம் நினைக்கா
காதல் வரிகளும் இல்லையடி
என்னிடத்தில் ....

உன் சமையலறையில்
சமையல் காரனாக
உன் உற்ற தோழனாக
பயணிக்க ஆசைதான் ...

உன்ன தங்தத்தட்டில் சுமப்பேனு சொல்லி ...
உன்மதிப்பை காசுக்கு ஒப்பிடும் எண்ணம் இல்ல ...
வாழ்நாள் முழுதும் என் இதயத்தில்
உன்னை சுமக்கவே விரும்புகிறேன் ...

தேனிலவும் வெட்கப்பட்டு
பிறை நிலவாய்
கரையுதடி
உன்சிறு புன்னகையிலே....

நாள் முழுதும்
பல முறை வெறுமையாய்
உணர்ந்தாலும்...
உன் முகம் பார்க்கும் ஒரு நொடியே
பெரிதாய் சாதித்தது போல தோணுதடி ....

தென்றல் கூட என்னை கண்டு ...
ஸ்தம்பித்து நிக்குதடி ...
உன் இதய சுவாசத்தை
நான் களவாடி
சென்றதனால் ...

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் ...
கவி பாடும் என்பார்கள்
ஆம் !
அது உண்மை தான் ...
கட்டுத்தறியாகிய நான் கூட
காதல் கவிதையை
மொழி பெயர்ப்பு செய்கையில் ...

காரிருள் கூட என் மீது கரிசனம் காட்டுதடி ...
உன் பொன்னிற மேனியில்
கொள்ளை கொண்ட
பிரகாசத்தை
என் மீது படர்த்தும் போது ...

மகிழுந்து பயணங்கள் கூட
என் மனதை மகிழ்வித்து செல்லுதடி ...
பசுமரத்தாணி போல பதிந்த
உன் மையல் விழி
பார்வையை எண்ணி எண்ணி ...

கயல் கொண்ட கண்ணழகி
கார்மேக குழலகி

கிறுகிறுக்கும் இமையழகி
கீற்றுப்பின்னிய பின்னலழகி

கோவைக்கா செவி அழகி
நாவல்பழ உதட்டழகி

பளிச்சிடும் மேனியழகி
வெண்ணிற நரையழகி

நீ மொத்தமாய் சேர்ந்த
பேரழகி ....

மெய்யான என் காதலை உயிரான
எழுத்துக்களால் உயிர்மெய்யாய் ...
மெய்ப்பித்து உன் கரம் கோர்க்க ஆசைப்பட்டு
என் மனச சொல்லி வச்சேன் உன்னருகே ...


இதுவரை நான் கேட்ட எதையுமே நீ
இல்லனு மறுத்து சொல்ல ...
என் காதலையும் மறுப்பியோனு
நெனச்சி நெனச்சி வேகுதடி
என் உள்ளம் ....


மொத்த முகத்தை
நான் பார்க்க ஆசைப்பட்டு ...
பல நாலு வேண்டியிருப்பன் ...
ஒரு நாளும் காட்டலையே
கடைசிவரை உன் முகத்தை ...

என் காதலுக்கு
உயிர் இல்லனு
நெனச்ச வேளையிலே
முகம் கூட
இல்லையின்னு
என்ன முழுசா நீ நம்ப வச்ச ...

பக்கம் பக்கமா எழுதி வச்சன்
என் காதல் தலைவிதியை ...


சுகமாய் எழுதிய வரிகள் கூட
சுகமற்று போகுதடி ....

என் கரை சேரா காதலை

எண்ணிய வேளையிலே ...

கண்ணீரும் கொதிக்குதடி
என்னவளை தேடுதடி ....

எழுதியவர் : முத்தேஸ்வரன் குமார் (5-Feb-23, 10:45 pm)
சேர்த்தது : முத்தேஸ்வரன்
பார்வை : 744

மேலே