கர்ப்பத்திலே கல்லறை
![](https://eluthu.com/images/loading.gif)
கர்ப்பத்திலே கல்லறை ....
ஓலக்குடிசையிலே !
சுண்ணாம்பு சுவருக்குள்ள ...
கோரைப்புல் பாய்விருச்சி ...
பஞ்சு தலையணை வெச்சி ...
சின்ன ! சின்ன ! மெட்டு போட்டு ...
சிலைபோல நான் உறங்க ...
எங்கிருந்து வந்தாளோ ...
எம்மனச கெடுத்தாளோ ...
இருவிழி கொண்டவளே ...
இணையவழி வந்தவளே ...
உம்முகத்தை மறச்சி வச்ச
முக்காடு போட்டு வச்ச ...
அணுஅணுவாய் உன்ன எண்ணி ...
அழகழகா நெனச்சி வச்சன் ...
ஆயிரந்தான் வரஞ்சு வச்சேன் ...
என் காதல் ...
காவியத்தை ...
பத்திரமாய் எழுதி வச்சன் ...
பல
நாலு
தந்திரமாய் ...
அம்புட்டும் சேத்தி வச்சி ...
பந்தி வைக்க நாள் குறிச்சேன் ...
எம்மனசு ஓயலையே
உன் நினப்பு
போகலையே ...
உன் பேச்சு மெய்மணக்க ...
உன் பார்வை
எனை
அணைக்க ...
என்னவளை சொந்தமாக்க ...
நாள் முழுசும்
காத்திருருந்தன் ...
நடுச்சாமம்
விழிச்சிருந்தன் ...
சனிக்கிழமை நாளுன்னு
நான்
அறியாம
போனேனோ ...
எதார்த்தமா நான் கேட்க ...
ஏதேதோ
பதில் சொன்ன ...
பந்தி வைக்க
இன்னும் நாளிருந்தும் ...
எம்மனச உடைச்சிட்டியே ...
என்ன அடியோடு
ஒழிச்சிட்டியே ...
என்
கனவு
அரங்கேற்றம் ஆகிடுமோ ...
இல்ல
ஆழி வந்து அழிச்சிடுமோ ....
யாரையோ நண்பண்ணு சொல்லிவச்ச ...
அவனைத்தான் உன் வாழ்க்கையினு புள்ளிவச்ச .....
வருஷமும் ... ஏலாச்சினு
நீ சொல்ல ...
நான் கண்ட கனவெல்லாம் ...
கனவாகி
போனதடி
கற்பனையில் ...
நான்
குறிச்சி வச்ச நாளே ...
உன் ஒத்தையடி காதலுக்கு ...
முதல் நாளுன்னு .........
நெனைக்கையிலே ...
எம்மனச கொன்னுட்டியே ...
தீயிட்டு உருக்கிட்டியே ...
நாள் குறிச்ச காகிதமும் ...
கருகித்தான் போனதடி ...
ஊட்டி வளர்த்த காதலும் ...
செத்துத்தான் மிதக்குதடி ...
என் காதல் கண்ணீரில் ...
நான் மீள நாளாகுமோ ...
இல்ல நாலு ஏழாகுமோ ...
ஏழு நாலு
நிலைக்கலையே ...
யார் கண்ணு பட்டுடிச்சோ ...
என் காதல் ...
கர்பத்திலே ...
கல்லறைக்கு செல்ல ...
மலை போல கட்டி வச்சன் ...
என் காதல்
கருவறையை ...
மௌனமொழி பேசி ...
அனாதையாய் ...
தூக்கி எரிந்து
போறவளே ...
என்ன நீ கூட முழுசா மறந்துடுவ ...
ஆனா உன்ன
எப்படி
நான்
மறப்பேனோ ...
கண்ணீரும் வற்றித்தான்
போகுதடி ...
உன் நினைவுகளும் ...
மறந்துதான்
போகுமடி ...
நாட்கள்
செல்ல செல்ல ...
முழுசா உன்ன நான் மறப்பேனோ ...
இல்ல முற்றும் துறந்தவன் ஆவேனோ ...
கருவறை சுகம் கண்டதில்லை ...
காதலின் வாசம் முகர்ந்ததில்லை ...
கல்லறை மட்டும் சுகம் தந்திடுமோ ....
இத்தனை நாளா ...
நான் கொண்ட
கொள்கைகளையும் ...
கோட்பாடற்று
கிடக்கையிலே ...
போதுமடி
என் காதல் கதை ...
இனி ஒரு விதி
செஞ்சாலும் ...
முளைக்குமோ
என் மனதில்
காதல் "விதை " ........
இப்படிக்கு
கருவறைக்காதலன் ...