கூடல் தந்த விரசம்

கூடல் தந்த விரசம்!!!

மேக ரதத்தில்
மழைப் பெண்
அழகிய பயணம்!

பயணத்தில் மிதக்கும்
தன் காதலன் கருமுகிலோடு
அவள் உல்லாசம்!

ஊடலின் விளைவாய்
மின்னலும் வான் முழக்கமும்
தணிகிறது கூடலாய்!

கூடல் தந்த விரசம்
காற்றே காதலால்
குளிர்ந்து சுகமானது!

சுகமாகி ஆனந்தக்
கண்ணீராய் தனை உவந்திட்ட
தாய் மண்மீது தெளிக்கிறது
மேக ரதம்!

எழுதியவர் : ஜவ்ஹர் (5-Feb-23, 8:09 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 93

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே