விதைகள்

விதைத்த "விதை"
முளைக்கவில்லை
விதைத்தவன்
சலித்துப்போய்
முடக்கம் கொண்டான்

"விதைகள்"
முடங்கவில்லை
சலிக்கவில்லை
பூமியை பிளந்துக் கொண்டு
புன்னகையோடு முளைத்தது

முயற்சி உடையார்
இகழ்ச்சி அடையார்
என்ற பழமொழியை
மனிதனுக்கு
நினைவூட்டியது
"விதைகள்".....!!!
--கோவை சுபா

எழுதியவர் : கோவை சுபா (7-Feb-23, 5:28 am)
சேர்த்தது : கோவை சுபா
Tanglish : vithaikal
பார்வை : 227

மேலே