அளவற்ற அன்பு

மனிதர்களின் கால்களையே
சுற்றி வரும்
பூனைகள் தன் எஜமானனுக்கு
தன்னுடைய அளவற்ற அன்பை வெளிப்படுத்த முயற்சிக்கின்றன
நாம் அதை உதாசீனப்படுத்தினாலும்
அது தொடர்ந்து தன் அன்பை
வெளிப்படுத்திக்கொண்டே இருக்கிறது...

என்னவளே....
நானும் அந்தப் பூனைப்போலவே
என் நிபந்தனைகளற்ற காதலை
சுமந்துக்கொண்டு உன்னையே
சுற்றிவருகிறேன.

தினம் ஒரு முறை
என்னை திரும்பியாவது பார்த்துவிடு
.

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ் (17-Feb-23, 8:50 am)
Tanglish : alavatra anbu
பார்வை : 312

மேலே