மணமகன் வீட்டாரின் மிடுக்கும், பெண் வீட்டாரின் கடுப்பும்

மணமகன் வீட்டாரின் மிடுக்கும், பெண் வீட்டாரின் கடுப்பும்!

கல்யாண வீடென்றால்
கலகலப்புக்குப் பஞ்சமில்லை
மாப்பிள்ளை வீட்டாருக்கு
எக்ஸ்ட்ரா
கிளுகிளுப்புக்குக் குறையில்லை!

மிடுக்கும் அவர் முறுக்கும்
பெண் வீட்டாரைக் கிலிகொள்ளச் செய்துவிடும்
சிறு குறையும் குரலோங்கித்
தெருவரையும் பரந்துவிடும்!

வாவென்று அழைக்கவில்லை
புன்முறுவல் பூக்கவில்லை
கறி சரியாய் வைக்கவில்லையென்றெல்லாம்
ஏதொன்றும் குறையாய்
பாவம் பெண் வீட்டார்!

சம்மந்திக்குத் தனியோர் வாகனம்
சம்மந்தர் மனைவி சொல்லே மந்திரம் தலையாட்டி பொம்மை
மணவீடு இவர் ஆணைக்கு அடிமை
கோபித்துச் சென்றுவிடுவார் என்ற
பயத்தில் தடபுடலான வரவேற்பிவருக்கு!

பாவம் பெண்ணைப் பெற்ற மகான்
மகளுக்காய் அடிமைப்பட்டு
அங்கொன்றும் இங்கொன்றும்
குறைசொல்வார்க்கஞ்சி
உறவினர் பலரை கெஞ்சிக்கொண்டிருப்பான்
மிஞ்சும் மணமகன் தோழரை பார்க்கும்படி!

கெட்டி மேளம் முழங்கும் சத்தம்
பெண்ணைப் பெற்றவனுக்கு
மெல்லிசை கீதம்
மின்னலும் இடி முழக்கமும் ஓய்ந்து
நாடி வழமைக்குத் திரும்பி
சீராய் துடிக்கும் நிம்மதி தளிர்விடும்!!

எழுதியவர் : ஜவ்ஹர் (17-Feb-23, 5:10 pm)
சேர்த்தது : ஜவ்ஹர்
பார்வை : 231

மேலே