508 உமிழ்ந்து திட்டி உதைத்தகற்றுவள் பொதுமகள் – கணிகையரியல்பு 35

அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)
(காய் வருமிடத்தில் விளம் வரலாம்)

திருவெலாங் கொள்ளைகொண்டா டனைநோக்கிச் செவ்வதரத்
..தேனீ யென்றேன்
பெருவாயெச் சிலையுமிழ்ந்தாள் பேசென்றேன் கொடுஞ்சொற்கள்
..பேச லுற்றாள்
மருவென்றே னுதைக்குபுகை யாலிடித்துக் கடித்தினிய
..மதன நூலாம்
இருபாத தாடனமா லிங்கனமெல் லிதழ்சுவைத்தல்
..என்றா ளம்மா. 35

– கணிகையரியல்பு, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

பொருளுரை:

செல்வ முழுவதும் கொள்ளை கொண்ட பொதுமகளைப் பார்த்துச், `செம்மைநிறம் பொருந்திய உதட்டமிழ்தம் தருவாயாக என்றேன். அவள் தன் பெருவாய் எச்சிலை உமிழ்ந்தாள். `சிறிது உரையாடுக என்றேன். திட்டிப் பழித்தாள். `ஒருகால் தழுவுக என்றேன். காலால் உதைத்துக் கையாலிடித்துப் பல்லாற் கடித்துப் பருவரல் செய்தாள்.

திரு - செல்வம். தேன் - அமிழ்து. உதைக்குபு - உதைத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Feb-23, 10:31 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 12

சிறந்த கட்டுரைகள்

மேலே