கருணை மலர் - கண்ணம்மா கவிதைகள்

கருணை மலர் - கண்ணம்மா கவிதைகள்

என்ன சொல்றது
நா இந்த ஐடியில் வந்து முதல்ல ரிக்குவெஸ்ட் கொடுத்தது
மலருக்குதான்
வந்து ரெண்டாவது நாளோ மூணாவது நாளோ இருக்கும் ம்

நான் இங்க எழுதின முதல் கவிதையும்
உனக்கானதுதான்

இதோ இப்போ எழுதிக்கிட்டிருக்கிற
கடைசிக் கவிதையும்
உனக்கானதுதான்

ஏன் தெரியுமா ?

முதலும் கடைசியுமாய் எழுதப்படுவதுதான்
எப்பொழுதும் நினைவிடுக்கில் நின்றுகொண்டு
மறக்கமுடியாத ஒன்றாகி
உடன் வருகிறது
அவற்றில் மட்டும்தான்
லெகுவாய் கவனிக்கப் படுவீர்கள்
நீங்கள்

இவைகள் மட்டும்தான் வாசிக்கிற
அனைவராலும்
கவனிக்கப் படுகிறது
இடைப்பட்ட எத்தனையோ
எழுத்துகளில்
நிறைய வந்துபோனவர்கள் எல்லாரும்
யாராலும்
கவனிக்கப் படாதவர்களாகவே
எங்கோ சென்று மறைந்துபோயிருப்பார்கள்

எல்லோரிடமும் இருக்கும்
வெறும் ஒரு
நட்புப் பிடித்தம்போல
உன்னிடமும் இருக்கு ன்னு
பொய் சொல்ல விருப்பமில்லை
உன்னிடம் எனக்கு
இதுதானோ என்று உறுதி செய்யமுடியாத, பெயர்த்தெரியாத
மதிப்பும் மரியாதையும் கலந்த
ஒரு ஈர்ப்பிருக்கு மலர்.
அது என்ன ஏது இன்னது என
எனக்கு ஒன்றுமே சொல்லத் தெரியாது.

அன்னைக்கு சொன்னது மாதிரிதான்

நான் மலர்களின் கூட்டங்களுக்கு நடுவே பிறந்து மலர்ந்து
வளர்ந்தவன்.
என் சார்ந்த சூழல்கள்
எப்பொழுதும்
மலர்களைச் சுற்றியேதான் இருக்கும்
அப்படிப்பட்ட நான்
இன்றெல்லாம்
மலர் என்ற பெயரைக் கேட்டாலே
எனக்குள்
நிறைய வேதியல் மாற்றங்களின்
களிப்பாட்டம் துவங்குகிறது.
அரங்கேறுகிறது
பெரும் நடுக்கம் ஒன்று
இதமாகும் அவஸ்த்தைக்குள்
என்னை அனுசரணம் செய்கிறேன்.
அப்போதுதான்
ஒரு ஆண் வயதிற்கு வந்த தருணம்போல
அப்போதுதான்
அவன் உதடுகளுக்குமேலே
அரும்பு மீசை முளைவிடுவதுபோல,
அப்போதுதான்
இமைகளின் குருமயிரிழைகள்கூட
எட்டித் தொடாத
அவன் மேற்கன்னங்களிரண்டும்
சிவந்துவிடுவதைப் போல,
அவன் ஐந்தரை அடியின் மாற்றத்தினால்
அப்போதுதான்
அவனை கடவுள் ஆண் செய்ததுபோல
முட்டிக்கால்களிரண்டையும்
கைகளால் இறுக்கி
அமர்ந்திருக்கிறேன் மலர்.

எப்படியாவது எதையாவதுப் பண்ணி
இந்த மலர் என்றப் பெயர்
என் நினைவுகளிலிருந்து கூட
போய்டட்டுமே,
என எத்தனையோ
தடவை யோசிக்கிறேன்
மலர் என்ற பெயர்
என் நினைவின் மிச்சங்களாகக் கூட
இருக்கவேணாமேன்னு கூட யோசிக்கிறேன்

எங்கெங்கெல்லாமோ ஓடி ஒளிய முறபட்டாலும்
என் முன்னாடி வந்து நிக்கிறது
மலர் என்கிற பெயர்தான்
எந்த மலருடையப் பெயர்களைப் பார்த்தாலும் கேட்டாலும்
சட்டென்று நினைவிற்குள் வருவது
அது இந்த மலர் தான்
அன்றொருநாள் சொன்னதுபோல
எங்க போயி முட்டினாலும்
அங்கெல்லாம்
அறையடிச்சது மாதிரி
முன்னுக்கு வந்து நிக்கிறதும்
இந்த மலர் தான்
இந்த மலரே தான் .
நிழல் மடியில் நெருப்பிட்டுச்
சுமந்திருக்கும்
குழந்தையாய் ஒட்டிக் கொண்டிருக்கும் உன்பெயரை
என்னைவைத்து
என்னதான் செய்ய சொல்கிறாய் ம்
இது என்னமாதிரியான
என் மனதின்
தட்பவெப்பநிலை ன்னு தெரியலை.

சொல்லிட்டேன் போகும் முன்ன
சொல்லணுமில்லையா ம்

மலர்

ஏனோ உனக்கு எருக்கம்பூ பிடித்துப் போயிருக்கிறது
கூடியிருந்த இத்தனைநாளில்
என் மீசையின் கனம் உணர்ந்திருக்கவில்லைதானே நீ

என் தெரிவின் காரணங்கள் எல்லாம்
பிறர்பார்வைக்கு
மீளா ஆஸ்ச்சர்யத்தை வழங்கிப் போயிருக்கக் கூடும்

கோபத்தின்
கார இரைகளாகிவிட்டுப் பின்
காயக்குருவாதலின்
நேர்மை-இழை ஜென்மங்களென உயிர்த்திருப்பதைப்போல
பொல்லாவாக்கின் பல்லவிச்சரணம்
என் வசைத் தாண்டி
உன்னிடம்
நிறைவேற்றச் சொல்லியிருக்கிறது

நான்
கேட்டுக் கேட்டுச் செய்யும்
மருந்தால்
குணமாகி சிரிக்கிறாய் மலர்
கோர்த்துப் பதனிட்டு எதையும்
சூடத் தெரியாதவளின்
வாடகை வீட்டுத் தோட்டத்தில்
குட்டிக் குட்டிப் பூக்களென
எதற்காகவோ வளர்க்கிறாய்.
கேட்கவில்லை.
இதுதான் காரணம் எனச் சொல்லத் தெரியாமல்
வாய்மூடி அழுகிறவளிடம்
எதைக் கேட்டால் எதைத் தாழ்த் திறப்பாய் ?

கட்டிலிற்கும் நிலத்திற்குமான
ஆழம் தெரியாமல்
துள்ளிக் குதித்துவிட்டு
பிறிதொருநாள்
ஆறாத கடும் காய்ச்சலில்
கைக்கால் எழாத பிஞ்சுக் குழந்தையின்
பெருமூச்சொன்றை விரவி
வதையோடு கிடத்தப் பட்டவளிடம்
மெளனமான
தழுவலொன்றைத் தவிற எதையென்று உரைப்பேன் .

வாடாத குஞ்சுப்பூக்களுக்கு
வேறு வேறுப் பெயரிட்டு அந்தாதிச் சொல்லி
அழும் குரலை
எதிர்க்கொள்ள இயலவில்லை
கோபிக்கிறேன்..

சிறிதுநேரம்தான்
சரியாகிவிட்டு
சரிதலில் ஒரு சிறுகதையின் "மூலம்" போல்
ஒவ்வொரு படிக்கட்டாக
ஏறி ஏறி
பாத்திரம் நிறைக்கிறாய்.
எல்லோரையும்விட்டு
தூரமாய் எங்கோக் கொண்டுச்சென்று விளக்கணைத்துவிட்டு,
சிரிக்கத் தெரியாத
பட்டினிக் காரி உன்
அடிவயிறு அணைக்கிறேன்
அதன் இதமான சூடு
என் கண்வழியே உதிரம் கக்குகிறது
இதற்கு முன்புள்ள
வாழ்க்கையை
எப்படியாவது மறக்கச்செய்திடவேண்டும்..

இத்தனைநாள் மூடியவிழிகளுக்கு,
இது
எத்தனை வருடக் காத்திருப்போத் தெரியவில்லை.
இந்திர பஞ்சமியில்
ஒரு மார்கழிநாள் காற்றிளகி,
என்மேல்
திறந்த இரு கண்களுடைய தேஜஸின்
கறைமொழுகியது.
அந்த நீலத்திடலில்
ஒரு சாந்திரகாந்த கற்சிலைப்போல
அவள் மனப்ரதீஷ்ட்டை யடைந்துவிட்டிருந்தேன்

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (26-Feb-23, 4:42 pm)
பார்வை : 59

மேலே