காதல் அந்தாதி..
அழகான பெண்ணின்
கண்ணை பார்த்தேன்..
பார்த்ததும் மதி
மயங்கினேன் அவளால்..
அவளுக்குள் என்னை
தொலைத்தேன் ரசித்தேன்..
ரசிக்க ரசிக்க
மயங்கினால் மாது..
மாதுவின் வெட்கம்
வெளிப்பட்டது என்னிடம்..
என்னிடம் அவள்
பார்வை மென்மையானது..
மென்மையான தருணங்கள்
இனிமையாய் கடந்தது..
கடந்த நாளெல்லாம்
மீண்டும் எதிர்பார்க்கிறேன்..
எதிர்பார்க்கும் போதெல்லாம்
நினைவு வருகிறது..
வரும் நேரம்
எல்லாம் அழகாக..