விடுகதை

என் அதரங்களுடைய இதயத்தில் குன்றுகள் போல்
தடசமாகி நிற்கின்ற
பாதைக் காண்கிறேன்.
சூடேற்று உருகி நிற்கின்ற தாரின் மேல்
பறந்துசெல்லும்
வாகனங்களுடைய
யாத்திரை பாடுகள்
என்ன ஒரு இரைச்சல்.
என் தாழ்வரையில்,
நிசப்ததையின்
வேர்களைத் தேடிய
ஒரு பயணமதில்
நான் தீர்வாகிறேன்.
வற்றாத அன்பின் முறிவுகள் அனைத்தும்
கோடிட்டக் காயங்களின் வழியே ஒவ்வொன்றாய்
கசிந்துருகும் காட்சி
கண்முன்னால்
வந்து வந்து போகிறது.
இந்த இறுக்கங்களின் மாயாப்பிடியிலிருந்து
விடுப்பட எத்தனிக்கும் பொழுது வெளியேறும் ஒரு முகம்
பயங்கர மிருகம்போல் காட்சியளிக்கிறது.
உறக்கபோதம் கெட்டு கட்டிலிலிருந்து
பின்மாறி எழுந்திருக்கையில்
விழியார்த்துக் கரைகின்ற
குழந்தைபோல்
நகர்வுகளில்லாத
வாழ்க்கையை
என்னதான் சொல்வது
காண்பதெல்லாம் வெறும் கனவாக இருந்துவிடக்கூடாதா?

பைராகி

எழுதியவர் : பூக்காரன் கவிதைகள் - பைராகி (3-Mar-23, 10:20 pm)
Tanglish : vidukathai
பார்வை : 44

மேலே