எழுச்சி பெறட்டும் இளைஞர் படை

எழுச்சி பெறட்டும் இளைஞர் படை

இளைஞர் படையே எழுச்சிபெறு – நீ
இளைத்தவன் அல்ல துள்ளியெழு
உடலின் நரம்பினை முறுக்கேற்று – பெருங்
கடலலை போன்று செயலாற்று

மண்புழுவாய் உன்னை எண்ணாதே – இரு
கண்ணொளி வழிதரும் கலங்காதே!
நகக்கண் கொண்ட விரல்களினால் – உன்
நாட்டிற்கு உழைத்திட தயங்காதே!

நஞ்சாய் உலவிடும் கூட்டங்களை – இங்கு
பஞ்சாய் பறந்திட பாதையிடு
எஞ்சிடும் ஓரிரு தடைகளுமே – உனை
தஞ்சம் புகுந்தே மாலையிடும்

நீசரைக் கண்டால் விலகாமல் – நீ
நேருக்கு நேராய் மோதிவிடு
கூசிடும் காரியம் செய்வார்க்கு – நீ
கூரிய வாளாய் மாறிவிடு

அச்சத்தை உச்சத்தில் கொள்ளாதே! – உன்
ஆண்மைக்கு இழுக்கைத் தேடாதே!
இச்சகம் எதிர்த்தே வந்தாலும் - உன்
இதயம் நொறுங்கி முடங்காதே!

சொ. பாஸ்கரன்
ஆண்டிமடம்

எழுதியவர் : (5-Mar-23, 9:04 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 46

மேலே