களவுபோகும் கனிமவளம்

களவுபோகும் கனிமவளம்

கனிமவளம் உயிரென்று எல்லோரும் அறிவோம்
கண்ணைஇமை காப்பதுபோல் காத்திடவே எழுவோம்
கொள்ளைகொள்ளும் கூட்டத்தைக் காவுதர துணிவோம்
கூடிஒன்று சேர்ந்துநாம் இணைந்தொன்றாய் முயல்வோம்

மரம்வெட்டும் கூட்டத்தை மண்டியிடச் செய்வோம்
உரமாகும் படிஇந்த மண்ணுக்குள் புதைப்போம்
வழிந்தோடும் நதிகாக்கும் மணல்திருடும் பேரை
பழிபாவம் பார்க்காமல் குழியிலிட்டு எரிப்போம்

கனிமவளம் காக்கின்ற ஆர்வலரைக் கண்டால்
கடவுளென கால்தொட்டு கைகொண்டு தொழுவோம்
வைராக்யம் கொண்டிங்கு எல்லோரும் முயன்றால்
வையகத்தின் கனிமவளம் உயரும்நிலைத் தோன்றும்

மாற்றிவிடு மாற்றிவிடு மனிதாஉன் மனதை
மழைவளமும் மண்வளமும் காக்கஎழு தினமும்
இயற்கையினை பேணுகின்ற பணியைநீ செய்தால்
இறைவனென நீதெரிவாய் எல்லோர்க்கு இங்கே.

சொ,பாஸ்கரன்

எழுதியவர் : (5-Mar-23, 9:06 pm)
சேர்த்தது : சொ பாஸ்கரன்
பார்வை : 45

மேலே