இவள் மெல்லிய கூந்தலில் ஊஞ்சலாடுவது என் மாலை நேர பொழுதுபோக்கு

மலரை மென்மையாக தொட்ட தென்றலை
இன்னும் சற்று நில் என்றது மலர்
இல்லை இதோ வருகிறாளே இவள் மெல்லிய கூந்தலில்
ஊஞ்சலாடுவது என் மாலை நேர பொழுதுபோக்கு
என்று மறுத்தது தென்றல்

மென்மையாக பூமலரைத் தொட்டது பூந்தென்றல்
இன்னும் சிறிதுநில் லென்றது மென்மலர்
இல்லை இவள்மெல் லியகூந்த லில்ஊஞ்சல்
ஆடுவது மாலையில் என்பொழுது போக்கடி
ஆதலினால் நிற்பதற்கில் லை

எழுதியவர் : கவின் சாரலன் (10-Mar-23, 4:42 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 74

மேலே